Sunday, December 22, 2019
Thursday, December 5, 2019
Tuesday, December 3, 2019
Monday, December 2, 2019
*தமிழக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.*
*✅டிசம்பர் 27, 30ல் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்*
*✅வேட்புமனு தாக்கல் 6ஆம் தேதி*
*✅வேட்புமனு இறுதிநாள் 13ம் தேதி*
*✅வேட்புமனு ஆய்வு 16ம் தேதி*
*✅வேட்புமனு திரும்ப பெற 18ம் தேதி*
*✅முதற்கட்ட வாக்கு பதிவு 27 டிசம்பர்*
*✅இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 30 டிசம்பர்*
*✅காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு*
*✅2.1.2020ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.*
*✅கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்*
*✅மேயர் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதி தேர்தல்.*
*✅முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகள், 2ஆம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும்*
*✅நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.*
*✅நகர்புறங்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.*
*✅ஆணையை வெளியிட்டார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி*
Sunday, December 1, 2019
01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு ?
மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம். இதன்படிவிலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.
4% அகவிலைப்படி உயர்வு உறுதியானால், தற்போது 17% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் 21% அகவிலைப்படி பெறுவார்கள்.
5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பாடங்களை ரத்து செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடக்குமா; நடக்காதா என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகங்கள் இருந்தன.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வுக்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.பொதுத்தேர்வில் மூன்றாம் பருவ பாடங்கள் மட்டும் இடம் பெறுமா அல்லது மூன்று பருவ பாடங்களில் இருந்தும், கேள்விகள் இடம் பெறுமா என, தேர்வுத்துறை விளக்கவில்லை. முதல் பருவ புத்தகங்கள், தற்போது மாணவர்களிடம் இல்லை.
எனவே, புத்தகம் இல்லாத பாடங்களுக்கு எப்படி தயாராவது என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு பாட புத்தகங்கள் தாமதமாகவே வழங்கப் பட்டுள்ளன. அதனால், பல பாடங்கள் நடத்தப்படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதனால், பொது தேர்வுக்கு, எந்த பாடங்களில் இருந்து வினாக்களை அமைக்கலாம் என, தேர்வுத்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கு கங்கா Guide (ஆங்கில வழி)
Click here to download







